in

தேனி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள் மீது ஒடுக்குமுறையா? பணிநீக்க மிரட்டல் எனப் புகார்!

தேனி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள் மீது ஒடுக்குமுறையா? பணிநீக்க மிரட்டல் எனப் புகார்!

தேனி மாவட்டம்: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளர்களைத் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கும் சுமித் நிறுவனத்தின் செயல்பாடு குறித்துத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊதிய உயர்வு மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டுப் போராடியவர்களையும் பாலியல் ரீதியான புகார்களைத் தைரியமாக எழுப்பியவர்களையும் குறிவைத்து நிறுவனத்தின் மேலாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் வேலையை விட்டு நீக்குவதாக மிரட்டி வருவதாகப் பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
​
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி தூய்மைப் பணியாளர் பாண்டிச்செல்வி கூறுகையில்
​

நான் மாற்றுத்திறனாளி, என் கணவரும் மாற்றுத்திறனாளி. இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்படுகிறோம். நாங்கள் சம்பள உயர்வு கேட்டு முதலமைச்சருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை வைத்து, அதன் பின்னர்தான் பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான முறையில் சம்பள உயர்வைப் பெற்றோம்.

ஆனால், அதைக் தாங்கிக்கொள்ள முடியாத ஜோனல் மேனேஜர் மற்றும் சேர்மன் உள்ளிட்டோர் எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள்.

போராட்டத்தில் முன்னின்று குரல் கொடுத்த 10 பேரை மட்டும் குறிவைத்து, அவசரகதியாகப் பணியை விட்டு நீக்கப் பார்ப்பதாகவும், இதைக் தட்டிக் கேட்டால் நீதிமன்றத்திற்குச் செல்லுங்கள் என்று நிர்வாகம் மிரட்டுவதாகவும் பணியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், புதிய ஆட்களை வைத்துக்கொண்டு பழைய பணியாளர்களை அச்சுறுத்தி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்

​நாங்கள் கொரோனா காலத்தில்கூட உயிரைப் பணையம் வைத்து வேலை பார்த்தோம். இப்போது எங்களுடைய நியாயமான உரிமைகளைக் கேட்டதற்காகப் பழிவாங்குகிறார்கள். எனக்கு மேலிடம் முறையிட்டு உரிய நீதி கிடைக்கவில்லை என்றால், மண்ணெண்ணெய் ஊற்றிச் செத்துப்போவதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.
​
15 ஆண்டுகளுக்கும் மேலாகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் ஏழைத் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் சுமித் நிறுவனத்தின் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இவர்களின் கண்ணீர் கோரிக்கையாக உள்ளது.

​

What do you think?

கிழக்கு கடற்கரை சாலை – காரங்காடு இணைப்பு சாலையில் மண் அரிப்பு: உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்!

நாகூர் ஆண்டவர் தர்கா 470-வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!