தேனியில் எஸ்எஸ்ஐ கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட 6 இளைஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்!
தேனி டிஎஸ்பி அலுவலகத்தில் எழுத்தர் ஆக பணிபுரிந்து வந்தவர் சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் (56), இவர் நேற்று முன்தினம் இரவு தீபாவளி தினத்தன்று பனி முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருக்கும்போது தேனி அருகே சமதர்மபுரத்தில் சாலை நடுவே இளைஞர்கள் சிலர் பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தனர்
அதனை தட்டி கேட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் தனது செல்போனில் வீடியோ எடுத்து தேனி காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார், இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் அவரிடம் இருந்த செல்போனை பறிக்கும் முயற்சியில் கைகலப்பு ஏற்பட்டது, இதில் எஸ்எஸ்ஐ செந்தில்குமாரை, இளைஞர்கள் தாக்கிய நிலையில் அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தேனி போலீசார் அவரை மீட்டு போலீஸ் வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அன்று இரவே தேனி காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம் தலைமையில் விசாரணை மேற்கொண்டனர் இதில் மகி என்கிற மகேஸ்வரன், சூரியமூர்த்தி, தீபன் ராஜ், ஆகாஷ், கெளதம், பரத்பிரனேஷ் உள்ளிட்ட ஆறு இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர், மேலும் தாக்குதல் நடைபெற்ற தினத்தன்று இளைஞர்களுடன் இருந்த மேலும் சிலரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஆறு இளைஞர்களை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக தேனி போலீசார் அவர்களை பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர், முன்னதாக பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்பு கைது செய்யப்பட்ட 6 இளைஞர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்
உயிரிழந்த எஸ்எஸ்ஐ செந்தில்குமாருக்கு தமிழக அரசு சார்பில் 40 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடப்பட்டது


