இரட்டணை ஸ்ரீ வெண்ணியம்மன் ஆலய ஆனி மாத பௌர்ணமி ஊஞ்சல் உற்சவம்
இரட்டணை ஸ்ரீ வெண்ணியம்மன் ஆலய ஆனி மாத பௌர்ணமி ஊஞ்சல் உற்சவம்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் இரட்டணை கிராமம் அருள்மிகு ஸ்ரீ வெண்ணியம்மன் ஆலய ஆனி மாத பௌர்ணமி முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வெண்ணியம்மனுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டு சிறிய தேரில் கோயில் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து ஊஞ்சலில் காட்சியளித்த வெண்ணியம்மனுக்கு கும்ப தீபம், அடுக்கு தீபம், பஞ்சமுக தீபாதாரணை, சத்திரங்கள் கொண்டு சோடச உபச்சாரம் ஆகியவை காண்பிக்கப்பட்டது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


