in

நாகூர் ஆண்டவர் தர்கா 470-வது கந்தூரி விழா! நாகையில் வானில் வர்ணஜாலம் காட்டிய பட்டாசுகள்!

நாகூர் ஆண்டவர் தர்கா 470-வது கந்தூரி விழா! நாகையில் வானில் வர்ணஜாலம் காட்டிய பட்டாசுகள்!

நாகை மாவட்டம் உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 470 -ஆம் ஆண்டு கந்தூரி திருவிழா நாளை இரவு துவங்கிறது இதையொட்டி கொடி ஊர்வலம் துவங்கும் இடமான நாகை பேகுளம் அருகில் உள்ள மீராப்பள்ளியில் இருந்து கொடி ஊர்வலம் தொடங்கும் பகுதியில் நாகை முஸ்லிம் ஜமாத் சார்பில் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இடைவிடாது வானில் வர்ணஜாலம் காட்டிய பட்டாசுகளை கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மத்தாப்பு, வானவெடி மற்றும் சங்கு சக்கரம் போன்றவை குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என அனைவரையும் வெகுவாக கவர்ந்தன. நாளை பகல் 12 மணிக்கு கொடி ஊர்வலம் நடைபெற இருக்கிறது.

நாகூர் ஆண்டவர் தர்காவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்று வைபவமும், அதனைத் தொடர்ந்து வரும் 19ஆம் தேதி நாகையில் இருந்து சந்தன கூடு ஊர்வலமும் 20 ஆம் அதிகாலை சந்தனம் பூசும் வைபவம் நடைபெறுகிறது.

What do you think?

“திரைக் கவர்ச்சி அரசியலுக்கு அடிமையாக மாட்டோம்!” – வேளாங்கண்ணியில் விழிப்புணர்வு கால்பந்து போட்டி!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கோலாகல தொடக்கம்!