in

ஏழைகளுக்கு புத்தாடை வழங்க உள்ள சமூக சேவகர்

ஏழைகளுக்கு புத்தாடை வழங்க உள்ள சமூக சேவகர்

 

தீபாவளி கொண்டாட ஐந்தாயிரம் ஏழைகளுக்கு புத்தாடை வழங்க உள்ள சமூக சேவகர் பாரதிமோகன்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சமூக சேவகர் பாரதி மோகன் இவர் தனது ஏழ்மை நிலையிலும் கடந்த பல ஆண்டுகளாக சிலரது உதவியை பெற்று சாலை ஓரங்களில் வசிக்கும் ஆதரவற்றோர் முதியோர் மாற்றுத்திறனாளிகள் கைவிடப்பட்டோர் என நூற்றுக்கணக்கானோருக்கு நாள் தோறும் நேரில் தேடி சென்று இலவச உணவு வழங்கி வருகிறார்.

அதேபோன்று பல்வேறு உதவிகளை இவர் செய்து வருகிறார் இந்நிலையில் தற்பொழுது தீபாவளி பண்டிகை ஒட்டி சாலை ஓரங்களில் வசிக்கும் ஆதரவற்றோர் முதியோர் மாற்றுத்திறனாளிகள் ஏழை எளியோருக்கு புத்தாடை வழங்கும் விதமாக சிலரின் உதவியை பெற்று சுமார் 5 ஆயிரம் பேருக்கு புத்தாடைகள் வழங்குவதற்காக தயார் நிலையில் உள்ளது.

இதில் கைலி வேஷ்டி புடவை போர்வை சட்டை என ஏராளமான புத்தாடைகளை வழங்க உள்ளார் இரண்டு நாட்களில் மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர் உட்பட நான்கு மாவட்டங்களில் சாலை ஓரங்களில் வசிப்பவர்களுக்கு புத்தாடைகளை நேரில் வழங்குகிறார்.

கடந்த பல ஆண்டுகளாக இந்த சேவை செய்து வருகிறார் பெரம்பூர் சமூக சேவகர் எஸ் பாரதிமோகன் அவருக்கு தொடர்ந்து பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

What do you think?

புதுச்சேரியில் கூரை வீட்டில் 8 சவரன் தங்க நகைகள் திருட்டு!

தீபாவளி வியாபாரம் சாலைகளே தெரியாத அளவிற்கு குவிந்த பொதுமக்கள்