2668 அடி மலை ஏறுவதற்கு முற்றிலும் தடை
வடகிழக்கு பருவமழையின் காரணமாக அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவில் பக்தர்கள் 2668 அடி மலை ஏறுவதற்கு முற்றிலும் தடை விதித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு……
கிரிவல பாதை உள்ளிட்ட இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மற்றும் 12 ட்ரோன் கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…..
கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு 25 சதவீதம் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், கூடுதலாக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பேட்டி……
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் காலை இரவு என பஞ்ச மூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற உள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான 24ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2668 அடி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
சுமார் 4500 கிலோ நெய் மற்றும் காடா துணி பயன்படுத்தி மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் பொதுமக்கள் மலை ஏற தடை என மாவட்ட ஆட்சியர் வந்தனா கார் தெரிவித்துள்ளார்.

மேலும் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு சுமார் 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் கணித்துள்ள நிலையில் 25 சதவீத கூடுதல் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும், பக்தர்களின் பாதுகாப்பை முன்னிட்டு கிரிவலப் பாதையில் 1000க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் 12 ட்ரோன்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் என தெரிவித்தவர்.
கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் எளிதாக கார் பார்க்கிங் இடங்கள் மற்றும் அன்னதான கூடங்கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை அறியவும் சாலைகளை அறிந்து கொள்ளும் வகையில் புதிதாக செயலியை அமைக்கப்பட்டுள்ளதாகவும், கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கண்ட்ரோல் ரூம் அமைக்கப்படுவதை போல் கிரிவலம் பாதையில் மினி கண்ட்ரோல் ரூம்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து தகவல்கள் சேகரிக்கப்படும் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து திருவண்ணாமலைக்குள் உள்நுழையக்கூடிய 9 சாலைகளில் 25 தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் 153 கார் பார்க்கிங் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தெரிவித்தார்.

