in

அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அச்சு இயந்திரம் தவெக பிரமுகர்

அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அச்சு இயந்திரம் தவெக பிரமுகர்

 

தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு தேரிழந்தூர் கம்பர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அச்சு இயந்திரம் தவெக பிரமுகர் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம், இரத்த தான முகாம், பொதுமக்களுக்கு காலை உணவு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் தேரிழந்தூர் கம்பர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தமிழக வெற்றி கழக பிரமுகர் கார்த்தி அச்சு இயந்திரத்தை தலைமையாசிரியரிடம் வழங்கினார்.

தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு பள்ளி மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தண்ணீர் டேங்க் வழங்கினார் இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் ரசிகராய் இருந்து மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருகிறார்.

பின்னர் பள்ளியின் மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளிக்கு இருக்கைகள் தேவை என கோரிக்கைகள் விடுத்ததை மூன்று பேர் அமரும் 20 மேஜை நாற்காலிகள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கும்பகோணம்: மாமன்ற கூட்டத்தில் படங்கள் மாட்டும் போட்டி  செய்தியாளர்கள் தரையில் அமர்ந்து செய்தி சேகரிப்பு