கடலூர் கம்மியம்பேட்டையில் கல்லறை திருநாள் அனுசரிப்பு!
கிறிஸ்தவ மக்களின் பாரம்பரிய வழக்கப்படி, மறைந்த முன்னோர்கள் மற்றும் உறவினர்களை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 2-ஆம் தேதி கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது.
அன்றைய தினம், கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்கள் மற்றும் உறவினர்களின் கல்லறைகளுக்குச் சென்று அவற்றைச் சுத்தம் செய்து, மலர் மாலைகள் அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

அதன்படி, இன்று கடலூர் கம்மியம்பேட்டையில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது மறைந்த உறவினர்களின் கல்லறைகளில் மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி, பிரார்த்தனை செய்து அஞ்சலி செலுத்தினர்.


