in

விற்காத மாம்பழங்களை டிராக்டரில் ஏற்றி குப்பையில் கொட்டும் அவலம்

விற்காத மாம்பழங்களை டிராக்டரில் ஏற்றி குப்பையில் கொட்டும் அவலம்

 

நத்தம் பகுதியில் மா விலை வீழ்ச்சி ஒரு கிலோ 5 ரூபாய்க்கு கீழ் விற்பதால் விவசாயிகள் கவலை விற்காத மாம்பழங்களை டிராக்டரில் ஏற்றி குப்பையில் கொட்டும் அவலம்.

தமிழகத்தில் சேலத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் தான் மாம்பழங்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது இங்கு அல்போன்சா பங்கன பள்ளி இமாம் பசத் உள்ளிட்ட உயர்ந்த ரக மாம்பழங்களும் கிரேப் செந்தூரம்மல்கோவா போன்ற நாட்டு ரகங்களும் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்று வட்டார பகுதிகளான நத்தம் சாணார்பட்டி கோபால்பட்டி வத்தி பட்டி பரலி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மாம்பழங்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்க நிலப்பரப்புகளில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிக அளவு மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டன உற்பத்தி செய்யப்பட்ட மாம்பழங்களை வெளி மாநிலங்களிலும் குறைந்த அளவே கொள்முதல் செய்து வந்தனர்.

இந்நிலையில் வெளிநாடுகளில் நடக்கும் போர் பதற்றம் காரணமாக இந்த வருடம் இப்பொழுதிகளில் இருந்து வெளிநாடுகளுக்கு மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படவில்லை இதனால் மாம்பழங்கள் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஒரு கிலோ மாம்பழங்கள் 10 முதல்20 வரை விற்கப்பட்டு வந்த மாம்பழங்கள் இந்த வருடம் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக மாம்பழங்கள் விலை சரிவை சந்தித்தது.

ஒரு கிலோ மாம்பழம்ரூபாய் ஐந்து முதல் பத்து ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஐந்து ரூபாய்க்கு கீழ் ஒரு கிலோ மூன்று ரூபாய் முதல் மூன்று 50 பைசா வரை விற்கப்பட்டு வருகிறது இதனால் கடும் பாதிப்புக்கு ஆளாகிய விவசாயிகள் மாம்பழங்களை டிராக்டர் மூலம் ஏற்றிக்கொண்டு குப்பைகளில் கொட்டி வருகின்றனர்.

இந்த நிலைமையை தீர்க்க மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு மாம்பழங்களுக்கு உரிய விலைகளை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

What do you think?

ஆதவ் அர்ஜுனா எம்எல்ஏக்களை விலை பேசி வாங்கி வருகிறார்- நயினார் நாகேந்திரன் பேட்டி

மின்னல் வேகத்தில் கணிதம்: 3 வயது குழந்தைகளின் அசத்தலான சாதனை