in

 தூய்மை பணியாளர்களை பாராட்டிய  பிரேமலதா விஜயகாந்த்

 தூய்மை பணியாளர்களை பாராட்டிய  பிரேமலதா விஜயகாந்த்

 

விருத்தாசலத்தில் குப்பையில் கிடந்த 3 சவரன் தங்கச் செயினை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சி ஸ்டேட் பேங்க் பகுதியில் வசித்து வருபவர்கள் சுகனேஸ்வரன் சரண்யா தம்பதியினர். இவர்களது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது கழுத்தில் இருந்த 3 சவரன் தங்கச் செயின் தவறி குப்பையில் விழுந்துவிட்டது.

அப்பகுதியில் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களாக பணிபுரிந்து வரும் சசிகலா மற்றும் சிலம்பரசன் ஆகியோர் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது குப்பையில் கிடந்த 3 சவரன் தங்கச் செயின் அவர்கள் கையில் கிடைத்தது. அதனை அவர்கள் நேர்மையுடன் எடுத்து உரியவர்களான சுகனேஸ்வரன் சரண்யா தம்பதியினரிடம் ஒப்படைத்தனர்.

இதனை அறிந்த விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் தூய்மைப் பணியாளர்களை தொலைபேசியில் அழைத்து பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தேமுதிக பண்ருட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவக்கொழுந்து தலைமையில் தூய்மைப் பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், நகரச் செயலாளர் ராஜ்குமார், நகர அவைத் தலைவர் சங்கர், மாவட்ட பிரதிநிதி பாலமுருகன், ஒன்றியச் செயலாளர் செம்பயன், கம்மாபுரம் ஒன்றியச் செயலாளர் பொன் தனசேகர் உள்ளிட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்…..

What do you think?

ஓசூர் ரங்கோ பண்டிதர் அக்ரஹாரத்தில் வேணுகோபாலசாமி கோவிலில் நான்கு வகையான ஹோமங்கள்!

மாயூரநாதர் ஆலயத்தில் விநாயகர் கொடியேற்றம்