பிங்க் மகளிருக்கான மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி
சிதம்பரத்தில் பிங்க் அக்டோபர் 2026 பெயரில் மகளிருக்கான மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி 100க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே பிங்க் அக்டோபர் 2026 என்ற தலைப்பில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாஸ்கரன் கொடியசைத்து துவக்கி வைத்தார் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேஷ் முன்னிலை வகித்தார்.

குறிப்பாக மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நர்சிங் படிக்கும் மாணவிகள் மாணவர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மார்பக புற்றுநோய் குறித்து கோஷங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக காந்தி சிலையில் பேரணி நிறைவடைந்தது. மேலும் பொது மக்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

