in

மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணி சுவாமி கோயில் பங்குனி உத்திர விழா


Watch – YouTube Click

மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணி சுவாமி கோயில் பங்குனி உத்திர விழா

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணி சுவாமி கோயில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு வெள்ளி வெள்ளி நாக வாகனம் வாகனம் உற்சவம் நடைபெற்றது.

திண்டிவனம் அடுத்த மயிலம் மலையின் மேல் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்தர விழா கடந்த 14/03/2024 விநாயகர் பூஜையுடன் துவங்கியது.

மேலும் பங்குனி உத்தர விழாவின் ஐந்தாம் நாளான இன்று வண்ண மலர்கள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி தெய்வானை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி தங்க கவசத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

மேலும் ஆலய வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு மூலிகைப் பொருட்கள் திரவியங்கள் வாசனை பொருட்கள் பட்டு வஸ்திரங்கள் நவதானிய பொருட்கள் தேன் பன்னீர் பால் பழங்கள் உள்ளிட்டு வை வைத்து செலுத்தப்பட்டது.

தொடர்ந்து பூர்ணாஹூதி செலுத்தி யாகசாலையில் வைக்கப்பட்ட கலசங்களுக்கு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ வள்ளி தெய்வானை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமிற்கு மகாதிபாரதனை நட்சத்திர தீபாரதனை பஞ்சமுக தீபாரதனை சத்திரங்கள் கொண்டு சோடச உபச்சாரம் மற்றும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து கோயில் உட்பிரகாரம் வந்து வெள்ளி நாக வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் வெள்ளி நாக வாகனத்தில் மலையை வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 23/4/2024 சனிக்கிழமை அன்று நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்ட சிவஞான பாலய சுவாமிகள் செய்து வருகிறார்.


Watch – YouTube Click

What do you think?

விருதுதான் முக்கியம்… எனக்கு வசுல்… இல்ல… குண்டை போடும் சங்கர்…கண்டாவும் கமல்

ஐஸ்லாந்தில் வெடித்துச் சிதறிய எரிமலை