in

தேவர் ஜெயந்தி விழா

தேவர் ஜெயந்தி விழா

 

தேவர் ஜெயந்தி விழாவில் திருமாவளவன் கலந்து கொள்ள வேண்டும் என மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை முன்பாக நின்று அழைப்பு விடுத்த தவெக மாமன்ற உறுப்பினர்.

திருமாவளவனை யாரும் ஜாதி தலைவராக பார்க்கவில்லை அவர் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கான தலைவராக பரிணமித்துவிட்டார்.

விளிம்பு நிலை மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர்கள் முத்துராமலிங்க தேவரும் அம்பேத்காரும்.

மதுரை மாநகராட்சி 62 வது வார்டு தவெக ஆதரவு கவுன்சிலர் ஜெயச்சந்திரன் மதுரையில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் திருமாவளவன் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், மதுரையில் தேவர் ஜெயந்தி அனைத்து சமுதாய மக்களும் ஒன்று கூடி கொண்டாடும் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

முத்துராமலிங்க தேவர் சமத்துவம் சகோதரத்துவம் சமூக நீதியை இந்த சமூகத்திற்கு எடுத்துரைத்தவர், அனைத்து சமுதாய தலைவர்களும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்வார்கள் அந்த வகையில் இந்த ஆண்டு நம் எழுச்சி தமிழர் தொல் திருமாவளவன் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்கு அவருக்கு அழைப்பு விடுகின்றோம்.

தேவரும் அம்பேத்கரும் வெவ்வேறு பாதையில் பயணித்திருந்தாலும் அவர்கள் இருவரும் மக்களைப் பார்த்த பார்வை ஒன்றாக தான் இருந்துள்ளது, விளிம்பு நிலை மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர்கள்.

அம்பேத்கரை கொள்கை தலைவராக வைத்துள்ள தொல் திருமாவளவன் தேவர் ஜெயந்தி விழாவில் குறிப்பாக மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு பகுதிக்கு தேவர் ஜெயந்தி நாளில் கலந்து கொள்ள வரவேண்டும்.

90 காலகட்டத்தில் உள்ள இளைஞர்கள் பெரிதாக சாதியப்படியில் சிக்கவில்லை ஆனால் ன இப்போது உள்ள இளைஞர்கள் ஜாதியின் பிடியில் சிக்கும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது

கச்சத்தீவு மீட்பு போராளி என முக்கையா தேவருக்கு விழா எடுத்தவர் திருமாவளவன் அவருக்காக ஒரு புத்தகத்தையும் வெளியிட்டார்
2007 லவ் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் நூற்றாண்டு விழாவில் எழுச்சி திருமாவளவன் பங்கேற்று பேசியுள்ளார்.

அந்த காலகட்டம் மீண்டும் வரவேண்டும் எல்லா சமுதாயமும் ஒன்றாக இருக்கிறோம் என்பதை உணர்த்த தேவர் ஜெயந்தி நிகழ்வில் அவர் பங்கேற்க வேண்டும்.

மதுரை மக்கள் சார்பாகவும் அனைத்து சமுதாய மக்கள் சார்பாகவும் திருமாவளவன் அவர்களுக்கு இந்த அழைப்பை விடுகிறோம்.

திருமாவளவனை யாரும் ஜாதி தலைவராக பார்க்கவில்லை அவர் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கான தலைவராக பரிணமித்துவிட்டார்.

சமூக நீதி வெற்றி கூட்டணியின் முக்கியமான தலைவரான திருமாவளவன் நிச்சயம் இந்த நிகழ்வில் பங்கேறபதை முன்னெடுக்க வேண்டும் அப்போதுதான் அடுத்த தலைமுறையினர் சாதியின் பிடியில் இருந்து சிக்காமல் பாதுகாக்கப்படுவார்கள்.

தேவர் அம்பேத்கரும் சாதிய தலைவர்கள் அல்ல சாதித்த தலைவர்கள் அவர்களின் கொள்கை பின்பற்றாளர்கள் நாங்களும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம்
குறிப்பாக மதுரை மக்கள் சாதியாக பிரிந்து இல்லை மதுரை மக்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம் என்றார்.‌

What do you think?

Casino Echtgeld hohe Gewinne: Ein Expertenleitfaden für Spieler

பிங்க் மகளிருக்கான மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி