in ,

*புதுச்சேரியில் ஆக்கிரமிப்பு என்ற போர்வையில் அதிகாரிகள் ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்று பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் வலியுறுத்தியுள்ளார்* புதுச்சேரி முத்துமாரியம்மன் கோவில் வீதியில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவுப்படி பொதுப்பணித்துறையினர் வருவாய்த்துறை அதிகாரிகள் நகராட்சியினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போர்வையில் வியாபாரிகளை மிகவும் அவமான கரமாகவும் திருடர்களைப் போல் மோசமாக நடத்துவதாகவும் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் கொடூரமான முறையில் நடந்து கொள்வது அரசுக்கு சரியல்ல தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து அமைச்சர்கள் இன்றும் முழுமையாக பதவி ஏற்காத சூழ்நிலையில் முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறேன் என்ற போர்வையில் பேனர்களை உடைப்பது கடைகளை உடைப்பது என்று மிகவும் மோசமான வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள் வியாபாரிகளின் ஆதரவோடு தான் இந்த ஆட்சி அமைந்துள்ளது இந்த வியாபாரிகள் கொடுக்கும் வரியால் தான் இந்த அரசாங்கம் நடக்கிறது அதிகாரிகள் இப்படி கடுமையாக நடப்பது குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் முதலமைச்சர் ரங்கசாமிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் ஏதோ திட்டமிட்டு களங்கம் ஏற்படுத்தும் விதமாக போல் தெரிகிறது வியாபாரிகளுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும் முதலமைச்சர் ரங்கசாமியிடம் அதிகாரிகள் உண்மையைச் சொல்லி இதற்கான விளக்கத்தைப் பெற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்களுக்கான அரசாங்கமும் வியாபாரிக்கான அரசாங்கமும் தான் இந்த அரசாங்கம் என்று அதிகாரிகள் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்

புதுச்சேரியில் ஆக்கிரமிப்பு என்ற போர்வையில் அதிகாரிகள் ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்று பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் வலியுறுத்தியுள்ளார்

புதுச்சேரி முத்துமாரியம்மன் கோவில் வீதியில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவுப்படி பொதுப்பணித்துறையினர் வருவாய்த்துறை அதிகாரிகள் நகராட்சியினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர் .

ஆக்கிரமிப்புகளை அகற்றும் போர்வையில் வியாபாரிகளை மிகவும் அவமான கரமாகவும் திருடர்களைப் போல் மோசமாக நடத்துவதாகவும் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் கொடூரமான முறையில் நடந்து கொள்வது அரசுக்கு சரியல்ல தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து அமைச்சர்கள் இன்றும் முழுமையாக பதவி ஏற்காத சூழ்நிலையில் முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறேன் என்ற போர்வையில்  பேனர்களை உடைப்பது கடைகளை உடைப்பது என்று மிகவும் மோசமான வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.

வியாபாரிகளின் ஆதரவோடு தான் இந்த ஆட்சி அமைந்துள்ளது இந்த வியாபாரிகள் கொடுக்கும் வரியால் தான் இந்த அரசாங்கம் நடக்கிறது
அதிகாரிகள் இப்படி கடுமையாக நடப்பது குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் முதலமைச்சர் ரங்கசாமிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் ஏதோ திட்டமிட்டு களங்கம் ஏற்படுத்தும் விதமாக போல் தெரிகிறது.

வியாபாரிகளுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும் முதலமைச்சர் ரங்கசாமியிடம் அதிகாரிகள் உண்மையைச் சொல்லி இதற்கான விளக்கத்தைப் பெற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்களுக்கான அரசாங்கமும் வியாபாரிக்கான அரசாங்கமும் தான் இந்த அரசாங்கம் என்று அதிகாரிகள் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்

What do you think?

பழனி கிரிவலப்பாதையில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த ஆக்கிரமிப்புகளில், மீதமிருந்த 14 ஆக்கிரமிப்பு வீடுகளும் இன்று ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டன

புதுச்சேரியில் தவறவிட்ட 45 லட்ச ரூபாய் மதிப்பிலான 240 செல்போன்களை சைபர் கிரைம் போலீஸார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.