நத்தம் அரண்மனை சந்தன கருப்பு கோயிலில் 2 உண்டியல்களை பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள்- நத்தம் காவல் துறையினர் விசாரணை
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் உள்ள அரண்மனை சந்தனக் கருப்பு கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதேபகுதியை சேர்ந்த பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். நேற்று இரவு கோவிலை பூசாரி மாரி பூஜைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
இன்று காலை வெள்ளிக்கிழமை என்பதால் வழக்கமான பூஜைகள் செய்வதற்காக கோயில் பூசாரி வந்துள்ளார். அப்போது, கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, கோவிலுக்குள் இருந்த உண்டியல்,கோவில் வளாகத்தில் உள்ள கற்பக விநாயகர் கோவிலிலும் உண்டியல் உடைக்கப்பட்டு பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. (உண்டியலில் பக்தர்களின் காணிக்கை பணம் எவ்வளவு இருக்கும் என்பது தெரியவில்லை).
மேலும் இரண்டு உண்டியல்களையும் உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்கள் கருப்பு கோயிலில் இருந்த உண்டியலை மட்டும் பணத்தை திருடி விட்டு வளாகத்தில் வீசி சென்றுள்ளன இதுகுறித்து நத்தம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையடுத்து கைரேகை நிபுணர்களை போலீசார் வரவழைத்து மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.இது குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடிய சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


