in

தேக்கம்பட்டி சிறைக் கைதிகள் தப்பிய சம்பவம்: ஆண்டிப்பட்டியில் ட்ரோன் மூலம் போலீசார் தீவிர தேடுதல்! 

தேக்கம்பட்டி சிறைக் கைதிகள் தப்பிய சம்பவம்: ஆண்டிப்பட்டியில் ட்ரோன் மூலம் போலீசார் தீவிர தேடுதல்! 

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறைச்சாலையில் காவலர்களை தாக்கிவிட்டு 17 சிறை கைதிகள் தப்பிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் வெவ்வேறு பகுதிகளில் பதுங்கி இருந்த நான்கு சிறை கைதிகள் பிடிக்கப்பட்டனர். மீதமுள்ள 13 கைதிகளையும் பிடிக்கும் முனைப்புடன் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர். அதில் ஒரு பகுதியாக ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு தப்பிய குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர். சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு பறந்து செல்லும் அதிநவீன ட்ரோன் கேமரா மூலம் சிறை கைதிகளை தேடி வருகின்றனர். இது தவிர ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் கொண்டு தப்பியவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் இறங்கி உள்ளனர்.

இது தவிர தேனி மாவட்டம் முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் போலீசார் தனித்தனி குழுக்களாக ரோந்து செல்வதுடன் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். சிறைக் கைதிகள் தப்பிச்சென்ற சம்பவத்தால் தேனி மாவட்டமே பரபரப்பாக காணப்படுகிறது.

What do you think?

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்! 

புதுச்சேரியில் மழைநீர் வடியாததால் மக்கள் அவதி! வீட்டுக்குள் மீன், பூரான், எலி புகுவதால் அச்சம்!