திருவண்ணாமலை அடுத்த கணத்தம்பூண்டி பைபாஸ் சாலை சந்திப்பில் பெங்களூருவில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சரக்கு ஏற்றிச் சென்ற லாரி எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு காவல் நிலைய போலீசார் லாரியின் கிளீனருக்கு லேசான காயம் ஏற்பட்டதைத் அறிந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க போலீசார் அந்த பகுதியில் வாகனங்களை வேகத்தை குறைத்து செல்லும்படி செய்கை மூலமும் அறிவித்த நிலையில் பெங்களூரில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை வேகத்தை குறைக்க சொல்லி போலீசார் சைகை காட்டிய போது அந்த கார் வேகத்தை குறைக்காமல் வந்தது சாலையின் ஓரத்தில் நின்றிருந்த போலீசாரின் வாகனத்தை இடிப்பது போல் சென்று முன்னாள் சென்ற வாகனத்தின் மீது மோதி நின்றது போலீசார் அந்த காரின் ஓட்டுனரை அழைத்த போது அந்த காரின் ஓட்டுனர் வாகனத்தை விட்டு ஓட்டம் பிடித்துள்ளார். காரின் ஓட்டுநர் ஏன் ஓடுகிறார் என்று தெரியாமல் திகைத்து நின்ற போலீசார் அவரை விரட்டி பிடிக்க முற்பட்டபோது சமுத்திரம் ஏரிக்கு சென்று தப்பி ஓடி விட்டதாக சொல்லப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் அதே இடத்துக்கு போலீசார் வந்து வாகனத்தை சோதனை செய்து பார்த்தபோது வாகனம் முழுவதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் காரை கைப்பற்றி காரில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும் காரின் நம்பர் பிளேட்டை வைத்து அந்த கார் யாருடையது எங்கிருந்து போதை பொருட்கள் கடத்தி வரப்படுகிறது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் விபத்துக்குள்ளான லாரியையும் சாலையிலிருந்து அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.


