in

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் துணை மின் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் துணை மின் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்

கடமங்குடி, அய்யாநல்லூர், வீராக்கண் உள்ளிட்ட பகுதிகளில் குறுவை சாகுபடிக்கு மின் மோட்டாரை மட்டுமே நம்பி விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாக மும்முனை மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மோட்டார் இயக்க முடியாமல் நெற்பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

மின்சார பற்றாக்குறையால் பயிர்கள் முற்றிலும் கருகி நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளதாக குற்றம்சாட்டி, திருப்பனந்தாள் துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

ராஜகோபுரம் சாமி தரிசனம் பெயரில் வசூல் வேட்டை

பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் நவநீத சேவை. இராஜ வீதிகளில் உலா வந்த பெருமாளை கண்டு ரசித்த பக்தர்கள்