in

ஆண்டிபட்டி ஸ்ரீ ரெங்கம்மாள் கோவிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள் விழா கோலாகலம் – சரஸ்வதி தேவி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு!

ஆண்டிபட்டி ஸ்ரீ ரெங்கம்மாள் கோவிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள் விழா கோலாகலம் – சரஸ்வதி தேவி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு!

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சுமங்கலி மற்றும் கன்னிப் பெண்கள் மங்கள ஆரத்தி எடுத்து சிறப்பு வழிபாடு – பல்வேறு வகையான கொலு பொம்மைகள் பக்தர்களை கவர்ந்தன!

தேனி, அக்டோபர் 19: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ரெங்கம்மாள் கோவிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு அம்மன் சரஸ்வதி தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஸ்ரீ ரெங்கம்மாள் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பல்வேறு வகையான கொலு பொம்மைகள் அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

குறிப்பாக, மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்கள், கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை விளக்கும் காட்சிகள், காய்கறிகள், பழங்கள், சிவபெருமானின் பல்வேறு திருவுருவங்கள் மற்றும் பரிவார தெய்வங்களின் தத்ரூப சிலைகள் உள்ளிட்ட ஏராளமான கொலு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவை கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களை வெகுவாக கவர்ந்தன.

நவராத்திரி திருவிழாவின் ஒவ்வொரு நாளும் உற்சவர் ரெங்கம்மாள் அம்மனுக்கு வெவ்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், நவராத்திரியின் ஒன்பதாம் நாளான ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு உற்சவர் ரெங்கம்மாள் அம்மனுக்கு சரஸ்வதி தேவி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் நவராத்திரி விரதம் மேற்கொண்ட சுமங்கலி பெண்கள், கன்னிப் பெண்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து சுமங்கலி மற்றும் கன்னிப் பெண்கள் ஒன்றிணைந்து சரஸ்வதி தேவி அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனுக்கு மங்கள ஆரத்தி எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டியது. அம்மனின் சிறப்பு அலங்காரம் மற்றும் கொலு பொம்மைகளை ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

விழாவின் நிறைவாக சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நவராத்திரி ஒன்பதாம் நாள் விழாவில் கலந்து கொண்டு சரஸ்வதி தேவி அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ ரெங்கம்மாள் அம்மனை தரிசனம் செய்தனர்.

What do you think?

தரங்கம்பாடி தாலுகாவில் ஆட்டோ ஸ்டாண்டுகள், மெக்கானிக் கடைகள் முதல் மீன்பிடித் துறைமுகம் வரை களைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம்.

கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாட்டம்