கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்
புவனகிரி அருகே அம்மன்குப்பம் ஊராட்சி கிராம மக்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அமைதிப் பேச்சு வார்த்தையில் அதிகாரிகள் கிராம மக்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள அம்மன்குப்பம் ஊராட்சியில் பொதுமக்கள் வீட்டு மனை பட்டா கேட்டு கையில் கருப்புக்கொடி ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அம்மன்குப்பம் ஊராட்சி உட்பட்ட பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் திரளாக கலந்து கொண்டு கையில் கருப்புக்கொடி ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கும் பொழுது கீழ் வளையமாதேவி அம்மன் குப்பம் ஊராட்சியில் 475 குடும்ப அட்டைகள் உள்ளதாகவும் ஊராட்சிக்கு சொந்தமான அரசு புஞ்சை நிலம், தரிசு நிலம் 12 ஏக்கர் 51 சென்ட் உள்ளது. 60 ஆண்டுகாலமாக இலவச வீட்டுமனை பட்டா கேட்டு போராடி வருகிறோம்.
இதன் சம்பந்தமாக பல தடவை பொதுமக்கள் மனு கொடுக்கப்பட்டும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. பல ஆட்சியர்களிடம் பலமுறை போராடி உள்ளதாகவும் இது சம்பந்தமாக அக்டோபர் 2-ம் தேதி பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர்.
இந்த மனுவின் பேரில் பொதுமக்களை விசாரணைக்காக அக்டோபர் 06-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து, டி ஆர் ஓ தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது அந்த பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை முன்வைத்ததால் பொதுமக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி அந்த அமைதி பேச்சு வார்த்தையை புறக்கணித்து வந்தனர்.
இந்நிலையில் பொதுமக்கள் அதிகாரிகளை மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கோரிக்கைகளை உடனடியாக வலியுறுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம் கையில் கருப்புக்கொடியுடன் நடத்தினர்.
மேலும் ஊரில் உள்ள அரசுக்கு சொந்தமான தரிசு நிலம் 12 ஏக்கர் 51 சென்ட். இதில் EB அலுவலகம் இயங்குவதற்கு 3 ஏக்கர் 41 சென்ட் எடுக்கப்பட்டது.
மீதம் உள்ள 9 ஏக்கர் 10 சென்ட் அரசு புஞ்சை மற்றும் தரிசு நிலத்தை மீட்டு அம்மன்குப்பம் ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் அப்படி வழங்கப்படவில்லை என்றால் அம்மன்குப்பம் ஊராட்சி பொதுமக்களாகிய நாங்கள் எங்களுடைய குடும்ப அட்டையும், வாக்காளர் அட்டையும் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பதாக முடிவு செய்துள்ளதாகவும் மேலும் இதன் தொடர்ச்சியாக அடுத்து வரும் இரு தினங்களில் அந்த பகுதியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருப்பதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
