புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை சார்லஸ் மார்டின் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜான் குமார் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கான அலுவலகம் திறக்கப்பட்டது.இதனை லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வம்,ரிச்சர்ட் ஜான்குமார், லதா ஜான்குமார்,முதலியார் பேட்டை பொதுமக்கள், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமாருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர்


