புதுச்சேரி. கட்டுமான பணியின் போது மின் விபத்தில் தொழிலாளி பலி..
உரிய நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள்-ஊர்மக்கள் 3 மணிநேரம் மறியல்..
புதுச்சேரி தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்.இவரது வீட்டு கட்டுமான பணிக்கு அதே பகுதியை சேர்ந்த கட்டுமான தொழிலாளி
சீனிவாசனை அழைத்துள்ளார்.
ஆனால் அவரது வீட்டிற்கு மேலே உயர் மின்னழுத்த பாதை சொல்வதால் வேலைக்கு வர முடியாது என அவர் கூறியுள்ளார்.மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகு தான் வேலை செய்யப் போகிறோம் என்று அவர் கூறியது நம்பி சீனிவாசன் வேலை செய்துள்ளார்.
ஆனால் திடீரென்று மின்சாரம் தாக்கி அவர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் சென்னையில் உயர் சிகிச்சையாக சேர்க்கப்பட்டார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த விபத்து நடந்த நிலையில் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதி மக்கள் தொண்டநாத்தம் பகுதியில் இன்று மாலை திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தின் காரணமாக பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

