in

பழனியில் ‘ஜனநாயகம்’ திரைப்பட வெளியீடு; ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

பழனியில் ‘ஜனநாயகம்’ திரைப்பட வெளியீடு; ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

நடிகரும் தமிழக முதல்வருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகம்’ திரைப்படம் இன்று பழனியில் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இதையொட்டி விஜய் ரசிகர்கள் அதிகாலை முதலே திரையரங்குகள் முன்பு திரண்டு, பட்டாசுகள் வெடித்தும், மேளதாளங்கள் முழங்க ஆடிப்பாடியும் உற்சாகமாக கொண்டாடினர்.

முதல் காட்சியைக் காண வந்த ரசிகர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்து, கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். மேலும் இனிப்புகள் வழங்கி, திரைப்பட வெளியீட்டை திருவிழா போன்று கொண்டாடினர்.

இந்த நிலையில், பழனி ரயில் நிலைய சாலையில் உள்ள ஒரு திரையரங்கம் முன்பு அமைக்கப்பட்டிருந்த விஜயின் பிரம்மாண்ட கட்டவுட் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த கட்டவுட்டில் விஜய், ஏசுநாதரை ஒத்த தோற்றத்தில் கலைநயத்துடன் சித்தரிக்கப்பட்டிருந்தார். மேலும் சில மத அடையாளங்களும் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

ரசிகர்கள் இந்த உருவ அமைப்பை, விஜயை உலகளாவிய அளவில் பாராட்டும் நோக்கில் உருவாக்கப்பட்ட கலைப்பணியாக விளக்கியதுடன், “hollywood ஜீசஸ்” என்ற வாசகத்தையும் அதில் இடம்பெறச் செய்திருந்தனர்.

திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு திரையரங்குகள் பகுதியில் உற்சாகமான சூழல் நிலவிய நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

What do you think?

புதுச்சேரி, காரைக்காலில் ‘சாகர் கவாஜ்’ கடலோர பாதுகாப்பு ஒத்திகை தீவிரம்

*புதுச்சேரி…நீட் விவகாரம்…ஆளுநர் மாளிகை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர்.குண்டு கட்டாக தூக்கி சென்ற போலீசார்..*