in

100 கோடியைத் தாண்டி மாபெரும் சாதனை படைத்த பழனி மலைக்கோயில் வருவாய்

100 கோடியைத் தாண்டி மாபெரும் சாதனை படைத்த பழனி மலைக்கோயில் வருவாய்

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

விசேஷ நாட்கள் மற்றும் தைப்பூசம் ,பங்குனி உத்திரம் ,வைகாசி விசாகம் ,கந்த சஷ்டிவிழா உள்ளிட்ட திருவிழாக் காலங்களில் ,கார்த்திகை ,மார்கழி ஐயப்ப பக்தர்கள் வருகை என பக்தர்களின் எண்ணிக்கை லட்சங்களைத் தாண்டுகிறது.

இவ்வாறு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காகவும், வழிபாட்டிற்காகவும் திருக்கோயில் நிர்வாகம் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் பயன்படுத்தும் மின் இழுவை ரயில் (Winch Rail), ரோப் கார் (Rope Car), விரைவுத் தரிசன டிக்கெட்டுகள், காலபூஜைக் கட்டணங்கள்,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அனைத்து வகையான அபிஷேகக் கட்டணங்கள் மற்றும் பிரசித்தி பெற்ற தங்கரத உலா போன்ற சேவைகளுக்காகப் பக்தர்கள் செலுத்தும் கட்டணங்கள் அனைத்தும் ,மற்றும் உண்டியல் காணிக்கைகள் உள்ளிட்ட , ஆன்லைன் மற்றும் நேரிடி கவுண்ட்டர்கள் மூலம் வசூலிக்கப்பட்டு வருகின்றன.

இந்து சமய அறநிலையத்துறையின் கணக்கு வழக்கின்படி, இந்த அனைத்துச் சேவைகளின் மூலமும் வரும் வருமானம் ‘பசலி ஆண்டு’ (ஜூலை 1 முதல் ஜூன் 30 வரை) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
​அதன்படி, தற்போது வெளியாகியுள்ள மலைக்கோயில் வரவு ஒப்பீட்டுப் பட்டியலின்படி, கடந்த 1435 ஆம் பசலி ஆண்டில் (01 ஜூலை 2025 முதல் 30 ஜூன் 2026 வரை) பழனி மலைக்கோயிலின் மொத்த வருவாய் ரூ. 103,24,13,525 (103 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 525 ரூபாய்) ஆக உயர்ந்து, முதன்முறையாக 100 கோடி ரூபாயைத் தாண்டி மாபெரும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
​கடந்த 6 ஆண்டுகளில் பழனி கோயிலின் வருவாய் இவ்வளவு அசுர வேகத்தில் உயர்ந்துள்ளது என்பதை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் இந்தப் பட்டியல் தெளிவுபடுத்துகிறது,

​2020 ஆண்டு ரூ. 15,28,94,560 (சுமார் 15.28 கோடி)

​2021 ஆண்டு ரூ. 41,97,82,755 (சுமார் 41.97 கோடி)

​2022 ஆண்டு ரூ. 80,62,20,267 (சுமார் 80.62 கோடி)

​2023 ஆண்டு ரூ. 86,06,06,774
(சுமார் 86.06 கோடி)

​2024 ஆண்டு ரூ. 97,32,20,918
(சுமார் 97.32 கோடி)

​2025ஆண்டு (கடந்த ஆண்டு): ரூ. 103,24,13,525 (103.24 கோடி! ) கடைசியாக
97 கோடியாக இருந்த வருவாய், இந்த முறை 103 கோடியாக உயர்ந்துள்ளது.

பக்தர்களின் வருகை பல மடங்கு அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. இந்த வருவாய் அனைத்தும் கோயிலின் உள்கட்டமைப்பு வசதிகள், பக்தர்களுக்கான அன்னதானம், மற்றும் தூய்மைப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

What do you think?

திருவாடானை அருகே கோவில் திருவிழா: விறுவிறுப்பாக நடந்த மாட்டு வண்டி பந்தயம்!

நாயக்கன்பேட்டை அமிர்தகடேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சை