in

ஆதீன போலி விடியோ விவகாரத்தில் ஆதீன நிர்வாகத்தினரை மிரட்டி பணம்


Watch – YouTube Click

ஆதீன போலி விடியோ விவகாரத்தில் ஆதீன நிர்வாகத்தினரை மிரட்டி பணம்

 

தருமபுரம் ஆதீன போலி விடியோ விவகாரத்தில் ஆதீன நிர்வாகத்தினரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் சிறையில் உள்ள 4 பேரை போலீசார் 2 நாள் கஸ்டடி எடுத்து விசாரணை

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் 27 -வது தலைமை ஆதீனமாக உள்ள மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி சிலர் போலீயாக வீடியோ தயாரித்து மிரட்டல் விடுத்து வந்தனர்.

இதுதொடர்பாக தருமபுர ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி என்பவர் கடந்த மாதம் 25ம்தேதி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஆடுதுறை வினோத்(வயது 32), திருவெண்காடு விக்னேஷ்(33), செம்பனார்கோவில் தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு(39), தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ்(28) ஆகியோரை கைது செய்த போலீசார், இந்திய தண்டனைச் சட்டம் 323, 307,389, 506(2), 120-பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்ற உத்தரவின்படி சிரையில் அடைத்தனர்.

மேலும் வழக்கு தொடர்பாக பாஜக மாவட்ட தலைவர் அகோரம், திமுக ஒன்றிய செயலாளர் திருக்கடையூர் விஜயகுமார், ஆதீனம் உதவியாளர் செந்தில் , செய்யூர் அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், திருச்சியைச் சேர்ந்த போட்டோகிராபர் பிரபாகரன் ஆகிய 5 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் அவர்களை வலைவீசி தேடி வந்த நிலையில் புகார் அளித்த விருத்தகிரி திருக்கடையூர் விஜயகுமார் மீது எந்த தவரும் இல்லை என்றும் ஆதீனத்தின் பிரச்சனைக்கு சமரசம் செய்த திருக்கடையூர் விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரிலேயே புகார் அளித்ததால் வழக்கில் இருந்து விடுவிக்ககோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவகத்திற்கு விருத்தகிரி மனு அளித்துள்ளார்.

இதேபோன்று ஆதீனத்தின் உதவியாளர் செந்தில் மீதும் இந்த வழக்கு தொடர்பாக எந்த சம்பந்தமும் இல்லை என மனு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தற்பொழுது சிறையில் உள்ளவர்கள் மேலும் சில தகவல்களை மறைத்துள்ளதாகவும் அவர்களிடம் தனித்தனியே விசாரணை மேற்கொண்டால் மேலும் உண்மை வெளிவர வாய்ப்புள்ளது எனக்கருதிய மயிலாடுதுறை போலீசார் அந்த நான்கு நபர்களையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவுசெய்து மயிலாடுதுறை குற்றவியல் நீதித்துறை நடுவர்நீதிமன்றம் எண்.1ல் போலீசார் மனு செய்தனர்.

வேண்டுகோளை பரிசீலித்த நீதிபதி கலைவாணி, மயிலாடுதுறை போலீசார் கேட்கும் 5 நாள் அளிக்க முடியாது என்றும் 2 தினங்கள் மட்டுமே விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். 13-ஆம் தேதி மாலை 4 நபர்களையும் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறை போலீசார் சிறையிலிருந்து வினோத், விக்னேஷ், ஸ்ரீநிவாஸ் மற்றும் குடியரசு ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மயிலாடுதுறை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் தீ மிதி திருவிழா

மறைந்தாலும் நின் புகழ் என்று மறையாது போல…. இந்த பொண்ணுகூட மட்டும் நடிக்கவே மாட்டேன்…