in

சூரிய மின்சக்தி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


Watch – YouTube Click

சூரிய மின்சக்தி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வகை செய்யும் பிரதமரின் சூரிய மின்சக்தி இல்லத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இடைக்கால பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வீடுகளின் கூரையில் சூரியசக்தி மின் அமைப்பை உருவாக்க நிதி உதவி அளிக்கும் திட்டத்திற்கு 75,000 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் முடிவுகள் குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், “பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. ‘பி.எம். சூர்யா கர்: முஃப்ட் பிஜிலி யோஜனா’ திட்டத்திற்கு இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடி குடும்பங்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும்.

இந்த திட்டமானது சோலார் உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிக்கு உத்வேகம் அளித்து 17 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்கும். இந்தத் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு குடும்பமும் 1 கிலோவாட் அமைப்புக்கு 30,000 ரூபாயும், 2 கிலோவாட் அமைப்புக்கு 60,000 ரூபாயும் மானியமாகப் பெறலாம். இதனால் மக்கள் தங்கள் மின்சாரக் கட்டணத்தைச் சேமிக்க முடியும். 3 கிலோவாட் மின்சார அமைப்பின் மூலம் ஒரு குடும்பம், சராசரியாக ஒரு மாதத்திற்கு 300 யூனிட்களுக்கு மேல் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்” என்றார்.


Watch – YouTube Click

What do you think?

நெல்லையில் பள்ளி வளாகத்துக்கு உள்ளே இருசக்கர வாகனத்தில் வீலிங்

திண்டிவனத்தில் ஸ்ரீ திந்திரிணீஸ்வரர் கோவிலில் பாலாலய பூஜை