in

தாய் வழியில் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்

தாய் வழியில் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்

 

புதுச்சேரியில் பட்டியல் இன மக்களுக்கு பூர்வீகம் மற்றும் குடி பெயர்ந்தவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் தாய் வழியில் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் விசிக மனு அளித்தனர்.

புதுச்சேரி மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், மாநில முதன்மை செயலாளர் அரிமா தமிழன் தலைமையில் மாநிலத்தின் பல்வேறு மக்கள் நலக் கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில்..

புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் பிரஞ்சு மொழிக்கு பதிலாக ஹிந்தி மொழியை கட்டாயமாக படிக்க வேண்டும் என்று அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும், ஆதிதிராவிடர்களை பூர்வீகம் மற்றும் குடி பெயர்ந்தவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் ஒன்றாக கருதி தாய் வழி அடிப்படையில் சாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும், மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிகள், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

What do you think?

நாகை அருகே மூதாட்டியிடம் செயின் பறிக்க முயற்சி Attempt to snatch chain from elderly woman near Nagai

பரங்கிப்பேட்டையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 3 மீனவர்கள் மாயம்