பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை காந்திபுரம் பகுதியில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திமுக ஆட்சியின் பொழுது கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த மு க ஸ்டாலின் அவர்கள் இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். சுமார் 301.71 கோடி மதிப்பீட்டில் ஏழு தளங்களுடன், 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த பிரம்மாண்ட மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்தை தொடர்ந்தது, கடந்த 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி தற்போதைய தமிழக முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.
இங்குள்ள மூன்று மற்றும் நான்காம் தளத்தில் தமிழ் புத்தகங்கள் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களின் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகங்கள் கொள்முதல் செய்ததில், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக பெரிய சர்ச்சையும் அரசியல் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
2000த்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், உண்மைக்கு மாறான தகவல்கள், மற்றும் சரிபார்க்கப்படாத பதிவுகளுடன், போலியான பதிப்பக விவரங்கள் இருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் என்பவர் குற்றம் சாட்டினார்.
அகல் விளக்கு மற்றும் பினிக்ஸ் போன்ற பதிப்பகங்கள் வழியாக செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலி எழுத்தாளர்களின் பெயர்களில் நூல்கள் தயாரிக்கப்பட்டு உண்மையான விலையை விட பல மடங்கு விலை அதிகமாக விற்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது.
இந்த விவகாரம் அனைத்து மக்களிடத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்ச்சைக்குரிய புத்தகங்கள் சுமார் 2000க்கும் மேற்பட்டவை பெரியார் அறிவுலகத்தில் இருந்து அகற்றப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திமுக மற்றும் மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், எழுத்தாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உரிய விசாரணை நடத்தபடும் என்று உறுதியளித்தார். இந்த விவகாரத்தில் முற்போக்கு இயக்கங்கள் மற்றும் கலை இலக்கிய சங்கங்கள் சார்பில் கோவை காந்திபுரத்தில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டது.
இந்த விவகாரத்தில் உரிய ஆய்வு நடத்த வேண்டி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்பொழுது கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில், 5 கார்களில் பெரியார் அலுவலகம் வந்த லஞ்ச ஒழிப்பு துறையினர், தற்பொழுது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கோவை காந்திபுரம் பெரியார் அறிவுலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீபாவளி விடுமுறைக்கு பின்னர், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கபட்ட நிலையில், இன்று காலையிலேயே பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நுழைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனை எத்தனை மணி நேரம் நடைபெற உள்ளது? இதில் என்னென்ன ஆவணங்கள் ஆய்வு செயப்பட உள்ளது? அதில் எவ்வளவு முறைகள் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து பின்னர் தெரியவரும் என லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளர்.


