in

புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலம்

புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலம்

 

புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் 14 கிலோமீட்டர் கிரிவலம்…..

ராஜ கோபுரம் எதிரே கற்பூரம் ஏற்றி 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டு வரும் பக்தர்கள்……

புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.

புரட்டாசி மாத பௌர்ணமி இரவு 11:06 மணிக்கு தொடங்கி 26ம் தேதி இரவு 10:44 மணிக்கு நிறைவடைய உள்ளதால் பக்தர்கள் இன்று இரவு மற்றும் நாளை இரவு என இரண்டு நாட்கள் கிரிவலம் மேற்கொள்ளலாம் என்று அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று மாலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக கிரிவலம் செல்லும் பக்தர்கள் ராஜ கோபுரம் எதிரே கற்பூரம் ஏற்றி தங்களது கிரிவலத்தை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

What do you think?

அக்னி வசந்த விழா துரியோதனன் படுகளம்