in

வேதாரண்யம் அருகே வெறிநாய்கள் அட்டகாசம்

வேதாரண்யம் அருகே வெறிநாய்கள் அட்டகாசம்

 

வேதாரண்யம் அருகே வெறிநாய்கள் அட்டகாசம்: 4 ஆடுகள் கடித்துக் குதறி பலி; பொதுமக்கள் அச்சம்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே விவசாயியின் வீட்டின் பட்டியில் கட்டப்பட்டிருந்த 4 ஆடுகளை தெருநாய்கள் கடித்துக் குதறி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

​வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கிராமம் கஞ்சமலை தெருவைச் சேர்ந்தவர் பாபு, விவசாயி. இவர் தனது வாழ்வாதாரத்திற்காக வீட்டின் அருகே கொட்டகை அமைத்து செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், நள்ளிரவில் கொட்டகைக்குள் புகுந்த தெருநாய்கள் கூட்டம், அங்கிருந்த ஆடுகளை சரமாரியாக கடித்துக் குதறியுள்ளது.

​நாய்களின் அலறல் சத்தம் கேட்டு வீட்டார் ஓடிவந்து பார்த்தபோது, படுகாயமடைந்த நிலையில் 4 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்தன.

​அப்பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுவதுடன் பொதுமக்களையும் அச்சுறுத்தி வருவதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

​எனவே, அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படும் முன், தெருநாய்களைப் பிடித்து கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட ஆட்சியரும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

சிக்கல் செல்லமுத்து மாரியம்மன் கோவில் ஆவணித் திருவிழா