நேபாள் பேரிடரில் தப்பி பிழைத்த தம்பதியினர்
நேபாள் பேரிடரில் தப்பி பிழைத்து மயிலாடுதுறை தில்லை நகரில் உள்ள சொந்த வீட்டிற்கு வந்த இரத்தினகுமார் பூங்குழலி தம்பதியினர்.
மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராகவன் ரத்தினகுமார் பூங்குழலி தம்பதியினருக்கு சால்வை அணிவித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பேரிடர் நிகழ்வுகளையும் தாங்கள் தப்பி பிழைத்தது குறித்தும் தம்பதியினர் தெரிவித்தனர்.

நேராக பூஜை அறைக்கு சென்று வழிபாடு செய்த தம்பதியினர் தங்களுடன் சென்ற மற்றவர்களும் மீண்டு வர பிரார்த்தனை செய்தனர்.

