புதுச்சேரியில் உணவு தானிய மானியம் CBDC முறையில் வழங்கல்; கைப்பேசி எண்ணை இணைக்க அறிவுறுத்தல்
புதுச்சேரி: புதுச்சேரியில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தானிய மானியம், இனி வங்கிக் கணக்கிற்கு பதிலாக CBDC முறையில் டிஜிட்டல் வாலட்டில் வரவு வைக்கப்படுகிறது.
புதுச்சேரி பிராந்தியத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 6,34,390 பயனாளிகள் உள்ளனர். இதில் இதுவரை 1,64,045 பயனாளிகள் தங்களது கைப்பேசி எண்ணை நியாய விலைக் கடைகளில் பதிவு செய்துள்ளனர்.
இதில், 1,02,470 பயனாளிகளுக்கு ஜூன் 2026 மாதத்திற்கான மானியம் CBDC முறையில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டையுடன் கைப்பேசி எண்ணை இணைக்காத பயனாளிகளின் மானியம் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதுவரை கைப்பேசி எண்ணை இணைக்காத பயனாளிகள் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்குள் தங்களது அருகிலுள்ள நியாய விலைக் கடைக்குச் சென்று, குடும்ப அட்டையுடன் கைப்பேசி எண்ணை ஆதாருடன் இணைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் உணவு தானிய மானியம் தொடர்ந்து தடையின்றி கிடைப்பதை உறுதி செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


