சிவாச்சாரியார் நல அறக்கட்டளை 22 ஆம் ஆண்டுசுந்தரமூர்த்தி குருபூஜை விழா
நாமக்கல்லில் சிவாச்சாரியார் நல அறக்கட்டளை சார்பாக 22 ஆம் ஆண்டுசுந்தரமூர்த்தி குருபூஜை விழா
நாமக்கல் மாவட்டம் வள்ளிபுரத்தில்தான் தோன்றீஸ்வரர் ஆலயம் உள்ள ஸ்ரீ வள்ளியம்மன் திருமண மண்டபத்தில் சிவாச்சார்யார் நல அறக்கட்டளை மற்றும் ஆதிசைவ சிவாச்சார்யார் நற்பணி மன்றத்தின் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு குருபூஜை, 22-ஆம் ஆண்டு மகாசபைக்கூட்டம் மற்றும் பள்ளி மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழா நிகழ்வுகள் G செல்வ கபில சிவாச்சாரியார் தலைமையிலும் செயலாளர் ரத்தின சபாபதி சிவாச்சாரியார் முன்னிலையில் பொருளாளர் B சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் உள்ளிட்ட பலர் நிர்வாகிகள் கலந்து கொண்டு மங்களகரமான ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 30-ஆம் நாள் (15-08-2026) சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

இதில் சிவாச்சார்யார் பெருமக்களும் விழாவில் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை சிவாச்சார்ய நல அறக்கட்டளை ஆதி சைவ சிவாச்சார்ய நற்பணி மன்றம்மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.


