in

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்

 

கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் துவங்கப்படவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீட்டு ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் 700 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தமிழக அரசிற்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழிப்பினார்கள்.

அதை தொடர்ந்து செந்தியாளர்களை சந்தித்த மு.வீரபாண்டியன்.
கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான சிறுவாணி மற்றும் பிள்ளூர் அணைகளில் தூர்வாரி, குடிநீர் விநியோகத்தை தடையின்றி உறுதி செய்ய வேண்டும்.

தெற்கு மற்றும் மேற்கு மாவட்ட நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் விவசாயத்தை மேம்படுத்தவும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பாண்டியாறு – புன்னம்புழா மற்றும் ஆனைமலையாறு – நல்லாறு திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

கோவை நகரின் தொழிற்சாலை வளர்ச்சிக்கும் மக்கள் தொகை பெருக்கத்திற்கும் ஏற்ப மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ள மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். நீலாம்பூர் முதல் மதுக்கரை வரையிலான நான்கு வழிச்சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும்.

மேலும் கோவையில் தனி ரயில்வே கோட்டம் அமைக்கப்பட வேண்டும்.
தமிழகத்தின் பொருளாதாரத்தில் பெரும் பங்காற்றும் கோவை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து நிறைவேற்ற வேண்டும்.

ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட வேண்டும். பழங்குடியின மக்களுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டு ஒப்படைப்பதோடு, 2006 வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். கோவையில் உயர்நீதிமன்றக் கிளை மற்றும் சின்னவேடம்பட்டி ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.

மேலும் போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் குற்றச் சம்பவங்கள் தமிழ் பண்பாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் முற்றிலும் எதிரானது. இதனை வெறும் அரசால் மட்டுமே தடுத்துவிட முடியாது, விழிப்புணர்வு மற்றும் புதிய சிந்தனைகள் மூலம் சமுதாயமாக இணைந்து முறியடிக்க வேண்டும்.

இருப்பினும், அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
“மத்தியில் ஆளும் பாஜக அரசின் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிரான போக்கை வீழ்த்துவதே இடதுசாரிகளின் முதன்மை அரசியல் கடமை.

மாநில அளவில் நல்லாட்சி மற்றும் ஜனநாயக உரிமைகளை காக்கும் நிலைப்பாட்டிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் ஆதரவாகவும், தவறுகளை சுட்டிக்காட்டி கண்டிக்கும் அமைப்பாகவும் செயல்படும்.”

கோவை மாவட்டத்தின் நிகழ்கால மற்றும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களுக்குத் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

What do you think?

படுகாயமடைந்த மீனவர்… தாயகம் அழைக்க உறவினர்கள் ஆட்சியரிடம் மனு

நாமக்கல் சேந்தமங்கலம் சிவஆலயத்தில் உழவாரப்பணி