ஓசூர் சோமேஸ்வரர் கோவிலில் சோமவார பிரதோஷ வழிபாடு
ஓசூர் சோமேஸ்வரர் கோவிலில் சோமவார பிரதோஷ வழிபாடு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம்நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத சோமேஸ்வரர் திருக்கோவிலில், சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதையொட்டி நந்தி பகவானுக்கும், மூலவர் ஸ்ரீ சோமேஸ்வரருக்கும் பால், தயிர், சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் சுவாமியை தரிசித்து வழிபட்டனர்.
இந்த பிரதோஷ வழிபாட்டில் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சோமேஸ்வரர் மற்றும் நந்தி பகவானை தரிசனம் செய்து வழிபட்டனர்.


