in

‘டாக்ஸிக்’ டிரெய்லர் விழாவில் நயன்தாரா மாஸ்!

‘டாக்ஸிக்’ டிரெய்லர் விழாவில் நயன்தாரா மாஸ்!

 

நம்ம தமிழ் சினிமாவுல மட்டுமில்லாம தென்னிந்திய திரையுலகிலேயே ‘லேடி சூப்பர்ஸ்டார்’ பட்டத்தோடு மாஸ் காட்டிட்டு வர்றவர் நம்ம நயன்தாரா.

பல வருஷங்களா படம் நடிச்சாலும், தன்னோட படங்களோட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வரவே மாட்டாருங்கிறது நயன்தாரா மேல எல்லாரும் வைக்கிற ஒரு குற்றச்சாட்டு!

“நயன் ஏன் ப்ரோமோஷனுக்கு வர மாட்டேங்குறாங்க?”னு ரசிகர்களுக்கும் பல நாளா கேள்வி இருந்துச்சு. இப்போ இந்த நீண்டகால கேள்விக்கு நயன்தாராவே நேரடியாகப் பதிலளிச்சிருக்காரு மக்களே!

கன்னட ராக்ஸ்டார் யாஷுடன் இணைந்து நயன்தாரா நடிச்சிருக்கும் ‘டாக்ஸிக்’ படத்தோட பிரம்மாண்ட டிரெய்லர் வெளியீட்டு விழாவுல நயன்தாரா மேடையேறி பேசியிருக்காரு!

அப்போ பேசின நயன்தாரா, “ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வர எனக்கு விருப்பம் இல்லைனு சொல்ல முடியாது. ஆனா, பொது மேடைகள்ல நின்னு பேசுறது எனக்கு அவ்வளவா வராது. அதனாலதான் நான் அதுல இருந்து தள்ளி நின்னேன்” அப்படின்னு ரொம்பவே நேர்மையா ஒப்புக்கிட்டாரு!

அப்படியிருந்தும் இவ்வளவு வருஷ வழக்கத்தை உடைச்சு ‘டாக்ஸிக்’ ப்ரோமோஷனுக்கு நயன்தாரா எப்படி வந்தாரு தெரியுமா? அதுக்கும் அவரே பதில் சொல்லியிருக்காரு.

“யாஷ் எனக்கு போன் பண்ணி கூப்பிட்டாரு… அவரோட அழைப்பை என்னால தட்டவே முடியல. அதான் இந்த விழாவுக்கு வந்தேன்!” அப்படின்னு சொல்லியிருக்காரு!

கே.ஜி.எஃப் படத்துக்கு அப்புறம் இந்திய அளவில மாஸ் ஹீரோவா இருக்குற யாஷின் ஒரே ஒரு போன் காலுக்காக, தன்னோட பல வருஷ கொள்கையையே தளர்த்தி நயன்தாரா மேடை ஏறியிருக்கிறது இப்போ சினிமா வட்டாரத்துல செம ஹாட் டாபிக்கா மாறியிருக்கு!

ப்ரோமோஷன் வர மாட்டேன்னு சொன்ன நயன்தாராவின் இந்த வெளிப்படையான பேச்சு பத்தியும், யாஷ் – நயன்தாராவின் இந்த மாஸ் கெமிஸ்ட்ரி பத்தியும் நீங்க என்ன நினைக்கிறீங்க மக்களே? மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!”

What do you think?

லோகேஷின் ஹீரோ அவதாரம்… சூர்யா கொடுத்த பாராட்டு!

 உப்பளங்களை காப்பாற்ற வலியுறுத்தி முற்றுகை