பால தண்டாயுதபாணி சுவாமி ஆலய லட்சார்ச்சனை பெருவிழா
நாமக்கல் சேந்தமங்கலம் அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் லட்சார்ச்சனை பெருவிழா.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அக்ரஹாரம் அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் ஆடி கிருத்திகை நட்சத்திரத்தினை சிறப்பிக்கும் வகையில் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு லட்சாரர்ச்சனை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
விழாவின் நிகழ்வாக நேற்றுகாலை ஆலயத்தினுள் மூலவர் மட்டும் உற்சவர் சுவாமிகளுக்கு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்து விநாயகர் வழிபாட்டுடன் லட்சார்ச்சனை விழா தொடங்கியுள்ளது.

காலை முதல் தொடங்கிய லட்சார்ச்சனைதமிழ் முறைப்படி தமிழில் மாலையுடன் நிறைவடைந்து மூலவர் மற்றும் உற்சவர் முருகப்பெருமானுக்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அருட்பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.


