in

குத்தாலம் ராஜகாளியம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்

குத்தாலம் ராஜகாளியம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருத்துருத்தி என்னும் குத்தாலம் ராஜகாளியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ராஜகாளியம்மன் ஆலய 22 ஆம் ஆண்டு திருநடன உற்சவம் கடந்த 22 ஆம் தேதி தொடங்கி ஒன்பது நாட்கள் நடைபெறும் .

இந்த திருநாடன உற்சவ விழா தினமும் ஒவ்வொரு ஆலயத்தில் இருந்தும் புறப்பட்டு அந்தந்த பகுதிகளில் திருநடன உற்சவம் நடைபெறும் ஒன்பதாம் நாளான வியாழக்கிழமை நேற்று முன்தினம் மீண்டும் ஆலயத்தை வந்தடைந்து திருநடன உற்சவம் பந்தல் காட்சியுடன் நிறைவு பெற்றது பத்தாம் நாளான நேற்று ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது .

முன்னதாக வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து ராஜகாளியம்மனை வழிபட்டு தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து வழிபட்டுச் சென்றனர் இவ்விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினரும் ராஜகாளியம்மன் இளைஞர் நற்பணி மன்றத்தினர் சார்பாகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

What do you think?

ஆடி மூன்றாம் வெள்ளி: முத்தாள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் குத்துவிளக்கு பூஜை

தொண்டியில் மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமையை இரண்டை பத்திரமாக கடலில் விட்ட மீனவர்கள்