in

குத்தாலம் ராஜகாளியம்மன் திருநடன உற்சவம்; பக்தர்கள் திரளாக பங்கேற்பு

குத்தாலம் ராஜகாளியம்மன் திருநடன உற்சவம்; பக்தர்கள் திரளாக பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருத்துருத்தி என்னும் குத்தாலம் ராஜகாளியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ராஜகாளியம்மன் ஆலய 22 ஆம் ஆண்டு திருநடன உற்சவம் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த திருநாடன உற்சவ விழா தினமும் ஒவ்வொரு ஆலயத்தில் இருந்தும் புறப்பட்டு அந்தந்த பகுதிகளில் திருநடன உற்சவம் நடைபெறும்.

ஒன்பதாம் நாள் மீண்டும் ஆலயத்தை வந்தடைந்து திருநடன உற்சவம் பந்தல் காட்சியுடன் நிறைவு பெறும் இரண்டாம் நாளான இன்று குத்தாலம் திரௌபதி அம்மன் ஆலய வளாகத்தில் ராஜகாளியம்மன் திருநடன உற்சவம் நடைபெற்றது .

அப்போது சூலம் தீச்சட்டி கையில் வைத்து திருநடனம் ஆடியது காண்போரை பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது தொடர்ந்து மகுடி ஆட்டம் கும்மியாட்டம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் வந்து திருநடன உற்சவத்தை கண்டு களித்தனர் அதனைத் தொடர்ந்து பக்தர்கள் வீடுகள் தோறும் பழங்கள் மாவிளக்கு தீபம் ஏற்றி ராஜகாளியம்மனுக்கு புடவை சாற்றி,மாலை அணிவித்து வழிபட்டனர்.

What do you think?

புதுச்சேரியில் பெண் கொலை  பீரோ உடைக்கப்படவில்லை …அணிந்திருந்த நகை மட்டும் திருட்டு

ஆட்டுடன் நூதன போராட்டம்; அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியரிடம் மனு