in

மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை: மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும்,நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி,சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் நடைபெற்ற மாலைநேர போராட்டத்தின் ஒரு பகுதியாக, மயிலாடுதுறையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு சங்கங்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன..

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில்,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்,இந்திய தொழிற்சங்க மையம்,இந்திய ஜனநாயக மாதர் சங்கம்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,இந்திய மாணவர் சங்கம்,மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன.
போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு,மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கோரிக்கைகளை விளக்கி உரையாற்றியதுடன்,மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.

What do you think?

மங்கைமடம் வீர நரசிம்மர் கோவிலில் திருக்கல்யாண விழா கோலாகலம்

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் நடைபெறும் யாகசாலை பூஜைகளால் பாதிக்கப்படும் கல்வெட்டுகள் இயற்கை ஓவியங்கள்.