in

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் போராட்டம்

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் போராட்டம்

 

தாயுமானவன் திட்டத்தை ஒழுங்குபடுத்துவது பணியாளர்களுக்கு ஓயவூதியம் வழங்குவது உட்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் 13அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அணைத்து பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில் பணியாளர்கள் ஓய்வு பெறும் ஆறு மாத காலத்திற்கு முன்பே பணப் பயனை கனக்கிட்டு பணி ஓய்வு பெறும் போதே வழங்க வேண்டும் என்றும் 2021 க்கு பிறகு ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் அணுமதிக்கபட வேண்டும் என்றும் தாயுமானவன் திட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் கணிணி பணியாளர்களை நிரந்தர படுத்துவது உட்பட 13 அம்ச கோரிக்கைகளை அமுல்படுத்த முழக்கமிட்டனர்.

ஆர்பாட்டத்தில் குத்தாலம் மயிலாடுதுறை செம்பனார்கோயில் சீர்காழி பகுதிகளை சேர்ந்த 200 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

What do you think?

ஆஷாட நவராத்திரி வராகி அம்மன் செந்தூர காப்பு அலங்காரம்

திருக்கடையூர் கோவிலில் பாடகர் உன்னிகிருஷ்ணன் குடும்பத்துடன் சாமி தரிசனம்