போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்ற வீ த லிடர்ஸ் அமைப்பினர்
மதுபான வடிவ பதாகைக்கு செருப்பு மாலை போட்டு போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்ற வீ த லிடர்ஸ் (அண்ணாமலை) அமைப்பினர்.
மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் அண்ணாமலையின் வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பாக போதை இல்லா தமிழகம் என்ற கோஷத்தை முன்வைத்து உறுதிமொழி ஏற்படும் நடைபெற்றது.
கண்ணன் என்பவரின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் மதுபான வடிவ பதாகைக்கு செருப்பு மாலை அணிவித்து முற்றிலும் மதுவை ஒழிக்க வேண்டும் இன்றோடு மதுவை கைவிட வேண்டும் போன்ற கோஷங்கள் எழுப்பி உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தொடர்ந்து அந்த பகுதியில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்து இன்றோடு மதுவை நீங்களும் கைவிட வேண்டும் என சத்தியம் பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து இந்த நிகழ்வு குறித்து பேட்டியளித்த கண்ணன், இதுவரை ஆட்சி அமைத்தவர்கள் மதுவை கைவிடுவோம் என கூறினார்கள் தவிர அதை செய்யவில்லை ஆனால் அண்ணாமலை அண்ணன் முதல் வருடத்தில் 33 சதவீத கடையை மூடுவோம் என்றும் அடுத்து படிப்படியாக மதுவை முற்றிலும் ஒழிப்போம் என்றும் முறையாக கூறி இருக்கிறார்.
இது கண்டிப்பாக சாத்தியமாகும். இந்த மாதம் போதை இல்லா தமிழகம் என்ற உறுதிமொழியோடு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் அடுத்த மாதம் சுற்றுச்சூழல் மாதம் என்ற நோக்கத்தோடு செயல்பட இருக்கிறோம் என்றார்.


