ஆனி உற்சவம் ஒன்பதாம் நாள் விழா திருவூடல் நிகழ்வு
ஆனி உற்சவத்தின் ஒன்பதாம் நாள் விழாவில் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு இடையே நடைபெறும் திருவூடல் நிகழ்வு……

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 8ம் தேதி அண்ணாமலையார் கோவிலில் உள்ள 63 அடி தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. குறிப்பாக தட்சிணாயன புண்ணிய கால கொடியேற்றம் நடைபெற்றது.
அனுதினமும் விநாயகர், சந்திரசேகரர், பராசக்தி அம்மன், சின்னநாயகர் உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
ஆனி பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் விழாவான இன்று அண்ணாமலையார் கோயில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து மகிழ மரம் அருகே நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு திருவருடல் நிகழ்வு நடைபெற்றது. நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் மூன்று முறை எதிரே வந்து பின்னர் ஒன்றாக தங்களது சன்னதிக்கு சென்றனர்.
குறிப்பாக கணவன் மனைவிக்குள் இடையே நடைபெறும் கருத்து வேறுபாடு குறிக்கும் வகையில் இந்த திருவூடல் நிகழ்வு நடைபெற்றது.
திருவூடல் பார்த்தால் மறுவூடல் இல்லை என்ற ஐதீகம் இருப்பதால் ஏராளமான தம்பதிகள் திருவூடல் நிகழ்வை கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தனர்.


