பண்ருட்டி அவுலியா தர்கா கந்தூரி ஊரூஸ் விழா
பண்ருட்டி அவுலியா தர்கா கந்தூரி ஊரூஸ் விழாவில் நள்ளிரவில் நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது ஏராளமான முஸ்லிம்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹஜ்ரத் நூர் முகமது ஷா அவுலியா தர்காவில் கந்தூரி உரூஸ் பண்டிகை கடந்த வாரம் கொடி ஊர்வலத்துடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து தினசரி இரவு உருது இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் முக்கிய விழாவான சந்தனக்கூடு ஊர்வலத்தையொட்டி ரவுலா ஷரிப்பு சாமதிக்கு சந்தனம் அணிவித்து நள்ளிரவு 12 மணி அளவில் சந்தன கலசம் கூண்டில் ஏற்றப்பட்டு மின் விளக்கு அலங்காரங்களுடன் வாணவேடிக்கை மற்றும் பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலம் வெகுபவர்சையாக நடைபெற்றது.

அப்பொழுது முஸ்லிம்கள் மலர் தூவி சந்தனக்கூடு வரவேற்றனர் இந்த விழாவை காண கடலூர் புதுச்சேரி விழுப்புரம் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டகளில் இருந்து முஸ்லிம்கள் ஏராளமான இந்துக்கள் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டார்கள்.
மேலும் பண்ருட்டி டிஎஸ்பி ரகுபதி தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


