in

அதிக மகசூல் கிடைத்திட வேண்டி வினோத வழிபாடு செய்த விவசாயிகள்

அதிக மகசூல் கிடைத்திட வேண்டி வினோத வழிபாடு செய்த விவசாயிகள்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தலைவ நாயக்கம்பட்டி கிராமத்தில் மானாவாரி பயிர்களாக நடப்பாண்டு தங்களது வயல்களில் நெல் மிளகாய் பருத்தி குதிரைவாலி மக்காச்சோளம் உளுந்து உள்ளிட்ட பல்வேறு வகையான சிறுதானியங்களை இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான. விளை நிலங்களில் அக்கிராமத்தினர் விதைத்து சாகுபடி செய்து பயிர்களை பாதுகாத்து வருகின்றனர்.

தற்போது பருவ மழை போதிய அளவு பெய்யாத நிலையில் பருவம் தப்பியது இதனால் கவலை அடைந்த விவசாயிகள் கிராமத்தில் வீட்டிற்கு ஓர் ஆண்கள் வீதம் கிராமத்தின் மையப் பகுதியில் ஒன்று கூடிய ஆண்கள் பனை ஓலையில் தீட்டு கொளுத்தி கருகிய சாம்பலில் மிளகாய் உப்பு ஆகியவற்றை கலந்த சாம்பலை குவித்து வைத்து விவசாயம் செழித்து விளைந்து அதிக மகசூல் கிடைத்திட வேண்டி கூட்டு வழிபாடு பிரார்த்தனை செய்த விவசாயிகள் ஈடுபட்டு கிராம காவல் தெய்வங்களின் சுவாமிகளுக்கு அந்த சாம்பலை படையலிட்டு தாங்கள் வயலில் விளைந்த பயிர்கள் மீது தெளித்து வினோத வழிபாடு செய்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

What do you think?

உலக அமைதி தூதுவர் பரஞ்சோதி குரு மகான் மதுரையில் பேட்டி

 வியாழன் சாய் பாபா சிறப்பு வழிபாடு