in

காமராஜர் அவதூறு விவகாரம்: முத்தர அகமது மீது நடவடிக்கை கோரி மேஜிஸ்டிரேட் உத்தரவு

காமராஜர் அவதூறு விவகாரம்: முத்தர அகமது மீது நடவடிக்கை கோரி மேஜிஸ்டிரேட் உத்தரவு

 

தூத்துக்குடி காமராஜர் குறித்து இழிவாக பேசிய யூடூப்பர் முத்தர அகமது மீது உடனடியாக முத்தையாபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற மேஜிஸ்டிரேட் இலக்கியா உத்தரவு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் கோரிக்கை.

இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: கடந்த 30.11.2025 அன்று யூடியூப் முக்தர் அகமது தனது யூடியூப் சேனலில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் பெருந்தலைவர் என்று அழைக்கப்படும் காமராஜர் குறித்து அவதூறு பரப்பும் கருத்துக்களை வெளியிட்டார்.

அப்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பாகி முக்தார் அகமதுவை கைது செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் ஆனால் அப்போதைய திமுக அரசு அவரை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தது.

இதைத்தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் முக்தார் அகமது மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் ஆனால் காவல்துறையினர் இது தொடர்பாக உரிய வழக்கு பதிவு செய்யாமல் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதைத் தொடர்ந்து வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் இரண்டில் முக்தார் அகமது மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்ற உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார் இந்த மனுவை விசாரித்த தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற மேஜிஸ்டிரேட் இலக்கியா முத்தையாபுரம் காவல்துறை பெருந்தலைவர் காமராஜரை இழிவாக பேசிய முக்தார் அகமது மீது உரிய நடவடிக்கை எடுத்து அவரை விசாரணை செய்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளார் மேலும் நான்கு வாரங்களுக்குள் காவல்துறை இது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவும் பிறப்பித்து உள்ளார்.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் முத்தையாபுரம் காவல்துறை பெருந்தலைவர் காமராஜர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசிய யூடியுப்ர் முக்தார் அகமது மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

What do you think?

வெற்றிலைக்கு ஆராய்ச்சி நிலையம் அமைக்க வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை

அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் பஞ்சநதி கோட்டை கிராம மக்கள்