வெற்றிலைக்கு ஆராய்ச்சி நிலையம் அமைக்க வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை
மருத்துவ குணம் கொண்ட கும்பகோணம் வெற்றிலைக்கு ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் என வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை.
தமிழக அரசு வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. தஞ்சாவூர் மாவட்ட வெற்றிலை விவசாயிகள் எதிர்பார்ப்பு குறித்து அளித்த பேட்டியில், தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு, கும்பகோணம், ராஜகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் வெற்றிலை சாகுபடி நடைபெறுகிறது.
இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 50 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்ய உள்ள நிதி நிலை அறிக்கையில் வெற்றிலை சாகுபடிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

வெற்றிலை ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும், ஏற்றுமதி மற்றும் சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், தோட்டத் துறையின் கீழ் உள்ள வெற்றிலை சாகுபடியை வேளாண் துறைக்கு கீழ் ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகளை தெரிவித்துள்ளனர்.


