in

ஓசூர் ஸ்ரீ வேல்முருகன் திருக்கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

ஓசூர் ஸ்ரீ வேல்முருகன் திருக்கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ வேல்முருகன் திருக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழாவின் நிறைவு நாளான இன்று, வள்ளி – தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஓசூர் பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வேல்முருகன் திருக்கோயிலில், வருடாந்திர கந்த சஷ்டி பெருவிழா கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றதைத் தொடர்ந்து, விழாவின் நிறைவு நாளான இன்று சுவாமி முருகப்பெருமானுக்குத் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

 

இதனை முன்னிட்டு, அதிகாலை முதலே கோயில் நடை திறக்கப்பட்டு, மூலவர் முருகப்பெருமானுக்குப் பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு நறுமணத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூலவர் ‘ராஜ அலங்காரத்தில்’ பக்தர்களுக்குக் காட்சியளித்து அருள்பாலித்தார்.
திருக்கல்யாண சடங்குகளின் ஒரு பகுதியாக, உற்சவர் வேல்முருகனின் திருப்பாதத்திற்கு நலங்கு இடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து, பாதத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பட்டுத் துணியால் துடைத்து குங்குமம் இட்டு, முருகப்பெருமானுக்குப் பூணூல் அணிவிக்கும் உபநயன வைபவம் விதிமுறைப்படி நடந்தது.

பின்னர், திருக்கோயில் வளாகத்தில் சிறப்பு யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, வேத விற்பன்னர்களின் வேத மந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டது.வேள்வித் தீயில் நறுமணத் திரவியங்கள் சமர்ப்பிக்கப்பட்டு மகா பூர்ணாஹுதி நடைபெற்றது.

மணக்கோலத்தில் காட்சியளித்த உற்சவமூர்த்தி, வண்ண மலர்களாலும், திருவாபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, கையில் வேல் மற்றும் சேவல் கொடியுடன் கம்பீரமாக எழுந்தருளினார். மணமகள் வீட்டார் சார்பில் பழங்கள், இனிப்புகள், பட்டு வஸ்திரங்கள் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்கள் மேளதாளம் முழங்க கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டன.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக, வேத மந்திரங்கள் முழங்கவும், மங்கள வாத்தியங்கள் இசைக்கவும், சுவாமிக்கும் அம்பாளுக்கும் இடையே தோள் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பக்தர்களின் ‘அரோகரா’ கோஷத்திற்கு மத்தியில்

What do you think?

ஓசூர் அழகன் மலை முருகன் கோவிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

சீர்காழியில் ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலயத்தில் திருக்கல்யாண வைபவம்