திருவாடானை அருகே கோவில் திருவிழா: விறுவிறுப்பாக நடந்த மாட்டு வண்டி பந்தயம்!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கல்லூர் கிராமத்தில் ஸ்ரீ திருவேட்டை அழகர் அய்யனார் திருக்கோவில் 126 ஆம் ஆண்டு புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு இளைஞர் நற்பணி மன்றத்தால் விறுவிறுப்பான மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது.
இந்தப் பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடைபெற்றது.
இதில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 35-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன.

பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், திறம்பட வண்டியை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் (மாட்டி வண்டி ஓட்டுநர்கள்) கிராம மக்கள் சார்பில் ரொக்கப் பரிசுகளும், கோப்பைகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இப்போட்டியைக் காண சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாகப்படுத்தினார்கள்.

