in

குமரக்கடவுள் ஆலயத்தில் சத்ரு சம்கார திரிஷதி அர்ச்சனை 33 அபிஷேகம் அலங்கார மகா கும்ப தீபாதாரணை கந்த சஷ்டி நிறைவு விழா

குமரக்கடவுள் ஆலயத்தில் சத்ரு சம்கார திரிஷதி அர்ச்சனை 33 அபிஷேகம் அலங்கார மகா கும்ப தீபாதாரணை கந்த சஷ்டி நிறைவு விழா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மேல கொடுமலூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ குமரக் கடவுள் ஆலயத்தில் மூலவர் சாமிக்கு
சத்ரு சம்கார திரிஷதி அர்ச்சனை 33 அபிஷேகம் அலங்கார மகா கும்ப தீபாதாரணை கந்த சஷ்டி ஆறாம் நாள் நிறைவு விழா இன்று அதிகாலையில் விமர்சியாக நடைபெற்றது.

முன்னதாக யாகசாலை பூஜை கணபதி ஹோமம் பூர்ணாகுதி தீபாதாரணை நடைபெற்றது. நிறைவாக அலங்கார கும்ப புனித நீர் மங்கல இசை வாத்தியங்கள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க குமரக் கடவுள் ஆலயத்தை சுற்றி வலம் சென்று மூலவர் குமரக் கடவுள் சுவாமிக்கு கும்பநீர் அபிஷேகம் சங்காபிஷேகம் கும்ப தீபம் மகா தீபம் பஞ்சமுக தீபம் தீபாதாரணைகள் மலர்களால் அர்ச்சனை நடைபெற்றது.

இதில் பரமக்குடி அபிராமம் கமுதி முதுகுளத்தூர் உள்ளிட்ட சுற்று வட்டார பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலையில் சுவாமி தரிசனம் வழிபாடு செய்து சென்றனர்

What do you think?

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! புயலாக வலுப்பெற வாய்ப்பு!

ஓசூர் ஸ்ரீ வேல்முருகன் கோவிலில் ஸ்கந்த சஷ்டி பெருவிழா கோலாகலம்!